Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கினார் இயக்குநர் பாரதிராஜா

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கினார் இயக்குநர் பாரதிராஜா

By: Nagaraj Mon, 03 Aug 2020 7:06:10 PM

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கினார் இயக்குநர் பாரதிராஜா

திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு புதிய சங்கத்தை தொடங்கியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

இந்த புதிய சங்கம் தொடங்கியது குறித்து ஒரு மடை அடைத்துக் கொண்டால் இன்னொரு மடையைத் திறப்பது போல், இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது என அவர் கூறியுள்ளார்.

பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக் குறி எல்லாவற்றிற்கும் பதில் தேடுவது முக்கியம் என்றும், தாய் சங்கத்தை உடைக்கவில்லை அது அப்படியே உள்ளது என்றும் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

bharathiraja,membership,producers association,cinema ,பாரதிராஜா, உறுப்பினர் சேர்க்கை, தயாரிப்பாளர்கள் சங்கம், சினிமா

கொரானாவினால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை மருந்து கொடுத்து சரியாக்குவதற்காக, தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தனது தலைமையில் உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்குவதாகவும், நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் பாரதிராஜா கூறியுள்ளார்.

Tags :