Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா!

முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா!

By: Monisha Sun, 01 Nov 2020 2:40:54 PM

முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட அடுத்தகட்ட ஊரடங்கு இன்று முதல் தொடங்குகிறது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதுமட்டுமின்றி தற்போது திரைப்பட படப்பிடிப்புகளுக்கு 100 பேர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 150 பேர்கள் வரை அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் திரையுலகினர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

corona virus,curfew,theaters,shooting,bharathiraja ,கொரோனா வைரஸ்,ஊரடங்கு,திரையரங்குகள்,படப்பிடிப்பு,பாரதிராஜா

இந்த நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திரையரங்குகளை திறக்கவும், படப்பிடிப்பை அதிக எண்ணிக்கையிலான நபர்களுடன் நடத்தவும் அனுமதியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags :
|