Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சிம்பு படத்திற்கு லொக்கேஷன் தேடும் பணியில் மும்முரமாகியுள் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி

சிம்பு படத்திற்கு லொக்கேஷன் தேடும் பணியில் மும்முரமாகியுள் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி

By: Nagaraj Wed, 17 May 2023 10:40:21 PM

சிம்பு படத்திற்கு லொக்கேஷன் தேடும் பணியில் மும்முரமாகியுள் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி

சென்னை: இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இந்த படத்திற்கு லொக்கேஷன் தேடும் பணியில் இயக்குனர் மும்முரமாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது தனது புதிய படத்திற்கான கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெந்து தணிந்தது காடு’, ஓபலி என் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தலை’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எஸ்டிஆர் 48 படத்திற்கு பிறகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

actor,movie,simbu , சிம்பு, தேசிங்கு பெரியசாமி, பிஸி

‘எஸ்.டி.ஆர். தற்காலிகமாக 48’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் 2024ல் வெளியாகும். இப்படத்திற்காக நடிகர் சிம்பு தாய்லாந்தில் தற்காப்பு கலை பயின்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் லோகேஷன் தேடும் பணியில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மும்முரமாக உள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் லோகேஷன் தேடும் பணி முடிவடைந்து ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|