Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இயக்குனர் கஜேந்திரனின் உதவியாளர் கால்டாக்ஸி படத்தில் வில்லனாக அறிமுகம்

இயக்குனர் கஜேந்திரனின் உதவியாளர் கால்டாக்ஸி படத்தில் வில்லனாக அறிமுகம்

By: Nagaraj Fri, 20 Nov 2020 4:04:59 PM

இயக்குனர் கஜேந்திரனின் உதவியாளர் கால்டாக்ஸி படத்தில் வில்லனாக அறிமுகம்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராகவும் உள்ளவர் டி.பி.கஜேந்திரன். இவர் தனது பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

டிபி கஜேந்திரனின் உதவியாளராக பல படங்களில் பணியாற்றியவர் நிமல். இவர் தற்போது 'கால் டாக்ஸி' என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதைப் பற்றி நிமல் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

தான் சென்னைக்கு வந்ததற்கு காரணமே சிறுவயதிலிருந்து நடிப்பின் மீது கொண்டிருந்த ஆர்வம் தான். சென்னையில் எனக்கு கஜேந்திரன் சாரை தவிர வேறு யாரையும் தெரியாது. எனது நிலைமையை பற்றி நான் அவரிடம் கூறியபோது அவர், 'முதலில் சினிமாவை பற்றி தெரிந்து கொள். அதுக்கப்புறம் நடி' என்று கூறி, மொத்த தயாரிப்பு பணிகளையும் நம்பி என்னிடம் கொடுத்தார்'.

nimal,director gajendran,thank you,call taxi,villain ,நிமல், இயக்குனர் கஜேந்திரன், நன்றி, கால் டாக்ஸி, வில்லன்

அதுமட்டுமில்லாமல் சினிமா உலகம் பற்றிய அனைத்தையும் கற்றுக்கொடுத்தார். தற்போது எனது ஆசைப்படி கால் டாக்ஸி என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் வில்லனாக நடிப்பு இருக்கிறேன். இந்தப் படத்தை இயக்குனர் பா.பாண்டியன் இயக்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து நிமல், அருணை பாலா இயக்கத்தில் 'அட்லி' என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் ஆர்.முருகதாசின் உதவி இயக்குனரான பிஎஸ் செல்வதுரை இயக்கவுள்ள மற்றொரு படத்திலும் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

என்னுடைய நடிப்பு கனவை நிறைவேற்ற உதவிய கஜேந்திரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|