- வீடு›
- பொழுதுபோக்கு›
- அஜித் படத்தில் இயக்குனர் கவுதம் மேனன்? கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் செய்தி
அஜித் படத்தில் இயக்குனர் கவுதம் மேனன்? கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் செய்தி
By: Nagaraj Sun, 11 Sept 2022 1:10:34 PM
சென்னை: இவர்தான் வில்லனா?... அஜித் - விக்னேஷ் சிவன் இணையும் படத்தின் வில்லன் கேரக்டர் குறித்த தகவல்கள் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூ தயாரிக்க, எச்.வினோத் இயக்குகிறார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏகே 61 என்ற ஒர்க்கிங் டைட்டிலில் இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கோகன், சமுத்திரகனி, வீரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் அஜித் 2 கேரக்டர்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அஜித் இடம்பெறாத காட்சிகளை எச். வினோத் படமாக்கி வருகிறார். இதற்கிடையே, லடாக்கில் அஜித் பைக்கில் சாகச பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அவரது 62-வது படத்தில் இந்தாண்டு இறுதிக்குள்
அஜித் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன்
இயக்குகிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
படத்தில்
இடம்பெறும் மற்ற டெக்னிஷியன்களை பார்த்துப் பார்த்து தேர்வு செய்து
வருகிறார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் வில்லனாக கவுதம் மேனன் நடிப்பதற்கு
அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சமீபகாலமாக
பல்வேறு படங்களில் இடம்பெற்றுள்ள கவுதம் மேனனின் நடிப்பு நல்ல வரவேற்பை
பெற்று வருகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து கவுதம், என்னை அறிந்தால் படத்தை
இயக்கியுள்ளார். அவரே முக்கிய வில்லனாக நடிக்க கூடும் என தகவல்கள்
தெரிவிக்கின்றன.