Advertisement

விஷாலின் 34வது படத்தை இயக்கும் இயக்குனர் ஹரி

By: Nagaraj Mon, 17 July 2023 7:21:29 PM

விஷாலின் 34வது படத்தை இயக்கும் இயக்குனர் ஹரி

சென்னை: விஷாலின் 34வது படத்தை இயக்குனர் ஹரி இசையமைக்கிறார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

லத்தி படத்தை தொடர்ந்து விஷால் தற்போது இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்துள்ளார்.

படத்தின் நாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

alliance,celebrity,gv prakash,hari,music composer,vishal ,இசையமைப்பாளர், கூட்டணி, ஜி.வி.பிரகாஷ், பிரபலம், விஷால், ஹரி

இதையடுத்து விஷாலின் 34வது படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விஷாலின் 34வது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Tags :
|