- வீடு›
- பொழுதுபோக்கு›
- லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவு என இயக்குனர் லோகேஷ் அறிவிப்பு
லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவு என இயக்குனர் லோகேஷ் அறிவிப்பு
By: Nagaraj Mon, 17 July 2023 7:22:43 PM
சென்னை: 6 மாதங்களாக நடந்து வந்த ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதை தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள “நா ரெடி” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் படத்தின் காட்சிகளை முடித்தார். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி 6 மாதங்களாக நடந்து வந்த ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.