Advertisement

லியோ .. வசனம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

By: vaithegi Sun, 08 Oct 2023 4:25:00 PM

லியோ  ..  வசனம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

“இந்த வார்த்தையை பேச வேண்டுமா என விஜய் கேட்டார்” ...விஜய் நடித்து உள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லரில் தகாத வார்த்தை இடம்பெற்றிருந்ததற்கு பலரும் தங்களது கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,

“திரையரங்குகளில் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டுதான் வெளியாகும். முதலில் இந்த வார்த்தையை பேச வேண்டுமா என விஜய் சந்தேகம் உடனே கேட்டார். நான்தான் கதைக்கு தேவையென கூறி அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன்.

lokesh kanagaraj,leo,lyrics ,லோகேஷ் கனகராஜ்,லியோ  ,வசனம்

ட்ரெய்லரில் அந்த இடத்தில் தேவைப்பட்டதால் வைத்தேன். யார் மனதையும் புண்படுத்த பயன்படுத்தவில்லை. இதற்கு முற்றிலும் நானே பொறுப்பேற்றுகொள்கிறேன்.

மேலும் இது நடிகர் விஜய் பேசிய வார்த்தை கிடையாது. இதையடுத்து லியோவில் பார்த்திபன் எனும் அந்தக் கதாபாத்திரம் பேசும் வார்த்தை தான்” என அவர் கூறினார்.

Tags :
|