- வீடு›
- பொழுதுபோக்கு›
- விஜய் படத்தில் கமலை நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் திட்டம்
விஜய் படத்தில் கமலை நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் திட்டம்
By: Nagaraj Fri, 18 Nov 2022 10:52:40 AM
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படத்தின் ஹீரோ விஜய். இந்த படத்தில் நடிகர் கமலை கேமியோ ரோலில் நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் சஞ்சய் தத், விஷால், திரிஷா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகிவிட்டது. ஆனால், இதுவரை இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
இன்னும் சில வாரங்களில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் விஜய்யுடன் இணைந்து கமல் ஹாசன் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்முலம் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய 'எல்.சி.யு' கான்செப்டில் இணைக்க முயற்சி செய்து விக்ரம் இப்படத்தை தளபதி 67னுடன் இணைத்துள்ளாரா என்று கூற பேச்சு துவங்கிவிட்டது. ஒரு வேலை அப்படி இருந்தால் கண்டிப்பாக திரையரங்கம் தெறிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அதுமட்டுமின்றி கண்டிப்பாக விக்ரம் படத்தின் வசூல் ரூ. 500 கோடியை கடந்து விஜய்யின் படம் மாபெரும் சாதனையை படைக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கிறாங்க. சொல்ல முடியாது. இதற்கு கமலும் ஓகே சொல்லி விக்ரம் படத்தில் சூர்யா என்ட்ரி எப்படி ஹிட் அடிச்சதோ அப்படி செய்வாங்க என்றும் சொல்கிறார்கள். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.