Advertisement

இயக்குனர் லோகேஷூக்கு காயம்

By: vaithegi Tue, 24 Oct 2023 5:06:53 PM

இயக்குனர் லோகேஷூக்கு காயம்

கேரளா ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றபோது, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சிறு காயம் ..‘லியோ’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்று, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ், கேரளாவின் பாலக்காட்டில் உள்ள அரோமா தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்தார்.

இதையடுத்து தற்பொழுது, பாலக்காடு தியேட்டருக்கு சென்ற இயக்குநர் லோகேஷை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்டத்தில் சிக்கிய அவருக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கொச்சியில் நடக்க இருந்த ரசிகர்கள் சந்திப்பு, செய்தியாளர் சந்திப்பு தற்காலிகமாக ரத்தாகியுள்ளது.

directed by lokeshu,leo ,இயக்குனர் லோகேஷூ,லியோ


எனவே இது குறித்து இயக்குனர் லோகஷே தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். விரைவில் உங்கள் அனைவரையும் கேரளாவில் சந்திக்க நிச்சயமாக வருவேன் என குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டை போலவே, கேரளாவிழும் அமோக வரவேற்பு பெற்று இப்படம் 5 நாட்களில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Tags :