Advertisement

நிவின்பாலி படத்தை பாராட்டிய இயக்குனர் மாரி செல்வராஜ்

By: Nagaraj Sun, 07 Aug 2022 7:47:04 PM

நிவின்பாலி படத்தை பாராட்டிய இயக்குனர் மாரி செல்வராஜ்

சென்னை: நிவின் பாலியை பாராட்டிய இயக்குனர்... இயக்குனர் மாரி செல்வராஜ், நிவின் பாலி நடிப்பில் வெளியான மஹாவீர்யார் படத்தைப் பாராட்டியுள்ளார்.

நிவின் பாலி இயக்குனர் அப்ரித் ஷைனி இயக்கத்தில் நடித்த மஹாவீர்யார் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 1983 மற்றும் ஆக்சன் ஹீரோ பிஜு ஆகிய படங்களுக்குப் பிறகு நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர்.

மஹாவீர்யார் படத்தில் ஆஷிஃப் அலியும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் லால், லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஶ்ரீவஸ்தாவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், கிருஷ்ண பிரசாத், சுராஜ் எஸ். குரூப். சுதீர் கரமனா, பத்மராஜன் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெலியனாடு, ஷைலஜா பி.அம்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

the movie is excellent,subtle matter,mari selvaraj,kudos ,திரைப்படம், சிறப்பாக உள்ளது, நுணுக்கமான விஷயம், மாரி செல்வராஜ், பாராட்டு

படம் வரலாற்று சம்பவங்களுடன் தற்போதைய கால கட்டத்தையும் இணைக்கும் பேண்டஸி ஜானரில் உருவாகியிருந்தது. படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் மஹாவீர்யார் படத்தைப் பாராட்டியுள்ளார். "சமூகம், நீதி, அதிகார ஆகியவை இணைந்து ஒடுக்கப்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அநீதிகள் பற்றிய நுணுக்கமான விஷயங்களையும் பகடி முறையில் கூறியுள்ள மஹாவீர்யார் திரைப்படம் சிறப்பாக உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

Tags :