Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஜிவி பிரகாஷ் நடித்து வரும் திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க ஒப்பந்தம்

ஜிவி பிரகாஷ் நடித்து வரும் திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க ஒப்பந்தம்

By: Monisha Fri, 18 Sept 2020 11:00:48 AM

ஜிவி பிரகாஷ் நடித்து வரும் திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க ஒப்பந்தம்

நடிகரும் இசை அமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்து வரும் ஒரு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

நடிகர் ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று 'பேச்சிலர்'. இந்த படத்தை சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக திவ்யபாரதி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

gv prakash,film,director mishkin,contract,character ,ஜிவி பிரகாஷ்,திரைப்படம்,இயக்குனர் மிஷ்கின்,ஒப்பந்தம்,கேரக்டர்

இயக்குனர் மிஷ்கின் ஏற்கனவே சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற தான் இயக்காத திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ஜிவி பிரகாஷின் படத்திலும் மிஷ்கின் நடிக்க உள்ளார்

இந்த நிலையில் மிஷ்கினின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அருண் விஜய்யும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அருண்விஜய் மற்றும் சிம்பு ஆகியோர் இணைந்து 'செக்க சிவந்த வானம்' என்ற படத்தில் நடித்துள்ளனர்.

Tags :
|