Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சூரரைப் போற்று தீபாவளிக்கு ஒரு சரியான விஷுவல் ட்ரீட் தான்; இயக்குனர் பாண்டிராஜ்

சூரரைப் போற்று தீபாவளிக்கு ஒரு சரியான விஷுவல் ட்ரீட் தான்; இயக்குனர் பாண்டிராஜ்

By: Monisha Thu, 12 Nov 2020 10:49:53 AM

சூரரைப் போற்று தீபாவளிக்கு ஒரு சரியான விஷுவல் ட்ரீட் தான்; இயக்குனர் பாண்டிராஜ்

சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் தீபாவளி விருந்தாக இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவே ஓடிடி தளத்தில் அந்த படத்தை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் சிலர் ஏற்கனவே அந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் 'சூரரைப் போற்று' படத்தை பார்த்த பிரபல இயக்குனர் பாண்டிராஜ் தனது சமூக வலைத்தளத்தில் சூர்யா உள்பட படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது:-

director pandiraj,visual treat,surya,surarai potru,diwali ,இயக்குனர் பாண்டிராஜ்,விஷுவல் ட்ரீட்,சூர்யா,சூரரைப் போற்று,தீபாவளி

'சூரரைப் போற்று' படத்தை பார்த்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு கேரக்டரும் இதயத்தை தொடும் வகையில் இருந்தது. சூர்யா மிக அபாரமாக நடித்து உள்ளார். சுதா கொங்கரா அவர்களின் கடுமையான உழைப்பை நான் இந்தப் படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் பார்த்தேன். ஜீவி பிரகாஷின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த தீபாவளிக்கு ஒரு சரியான விஷுவல் ட்ரீட் தான் இந்த திரைப்படம். 'சூரரைப் போற்று' படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்

சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்திற்கு கிடைத்த முதல் விமர்சனமே பாசிட்டிவாக வந்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

Tags :
|