Advertisement

கொரோனா நமக்கு கற்றுத்தந்தது என்ன?...இயக்குனர் சீனு ராமசாமி டுவிட்

By: Monisha Wed, 05 Aug 2020 1:25:19 PM

கொரோனா நமக்கு கற்றுத்தந்தது என்ன?...இயக்குனர் சீனு ராமசாமி டுவிட்

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் கொரோனா வைரஸால் வைரஸிடம் சிக்கி மனித இனமே தவித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸால் ஒரு சில நன்மைகளும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

முதல் கட்டமாக சுற்றுச் சூழல் மிகுந்த அளவில் சுத்தமாகி உள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து சுத்தப் படுத்த முடியாத கங்கை நதி, தற்போது தானாகவே சுத்தமாகி விட்டது. அதேபோல் காற்று மாசுபடும் பெருமளவு குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.

இவ்வாறு கொரோனாவால் ஒரு சில நன்மைகள் ஏற்பட்டுள்ளன நிலையில் கொரோனா நமக்கு கற்றுத்தந்தது என்ன? என்பது குறித்து பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் அதில் கூறி இருப்பதாவது:-

corona virus,director,seenu ramasamy,tweet ,கொரோனா வைரஸ்,இயக்குனர்,சீனு ராமசாமி,டுவிட்

கொரோனா கற்றுத்தந்தது
தேவைக்கான செலவு

ஓடிய வாழ்வை நிறுத்தி
ஓட்டத்தின் நோக்கம் பற்றி
கேள்வி கேட்டது.

இயற்கையின் அருமை தெளிவித்தது
மரண பயம் தந்தது
ஆணவம் தணித்தது

அதிகபட்சம் அடுத்த அறைக்கு நடக்க வைத்தது.
பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சமாளிக்கும் ஆசிரியர்களை தெய்வமாகக் கருத வைத்தது.

இவ்வாறு சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

Tags :