Advertisement

நீர் பறவை இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் சீனுராமசாமி அறிவிப்பு

By: Nagaraj Thu, 01 Dec 2022 12:04:27 PM

நீர் பறவை இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் சீனுராமசாமி அறிவிப்பு

சென்னை: நீர் பறவை படத்தின் இரண்டம் பாகம் உருவாகும் என இயக்குனர் சீனுராமசாமி கூறியுள்ளார்.

2012ல் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, பூ ராமு, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‛நீர்ப்பறவை'. சீனு ராமசாமி இயக்கி இருந்தார்.

seenuramasamy,the water bird,part ii,recorded by vishnu vishal ,சீனுராமசாமி, நீர்ப்பறவை, இரண்டாம்பாகம், பதிவு, விஷ்ணு விஷால்

அப்போது வரவேற்பையும், விஷ்ணு விஷாலுக்கு சினிமாவில் அங்கீகாரத்தையும் தந்த படம் இது. இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் இதன் இரண்டம் பாகம் உருவாகும் என கூறியுள்ளார் சீனுராமசாமி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு : ‛‛நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும். நீர்ப்பறவை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடுகட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைப் பெருமக்களுக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார் சீனுராமசாமி.

Tags :