- வீடு›
- பொழுதுபோக்கு›
- இந்தியன் 2 படத்தில் புதிய முயற்சியில் இறங்கியுள்ள இயக்குனர் ஷங்கர்
இந்தியன் 2 படத்தில் புதிய முயற்சியில் இறங்கியுள்ள இயக்குனர் ஷங்கர்
By: Nagaraj Tue, 25 Apr 2023 10:03:31 AM
சென்னை: இயக்குனர் ஷங்கர் ஒரு புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்று கோலிவுட்டில் தகவல்கள் பரபரக்கிறது. என்ன விஷயம் தெரியுங்களா?
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் முதல் பாகம், மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம், எடுக்கப்பட்டு வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு, இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சில பல பிரச்னைகளின் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் நடித்துள்ள இரண்டு முக்கிய நட்சத்திரங்களான விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோரின் இழப்பும் படக்குழுவினருக்கு பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மறைந்த நடிகர்களின் மீதமுள்ள காட்சிகளை எடுக்க, படத்தின் இயக்குநர் ஷங்கர் ஒரு மாற்று வழி கண்டுபிடிப்பார் எனவும் கூறப்பட்டு வந்தது. ஆனால், படத்தில் விவேக் மற்றும் நெடுமுடி வேணு இவர்களின் பகுதிகளும் இடம்பெறவேண்டும என்று ஷங்கர் விரும்புவதோடு, மறைந்த நட்சத்திரங்களின் அந்தந்த கதாபாத்திரங்களுக்கான காட்சிகளும் இன்னும் சில படமாக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அதனால், அதிநவீன VFX டெக்னாலஜி உதவியுடன் விவேக் மற்றும் நெடுமுடி வேணுவின் மீதமுள்ள காட்சிகளை எடுத்து முடிக்க, அப்படத்தின் இயக்குநர் ஷங்கர் தற்போது களத்தில் இறங்கி முயற்சி செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.