- வீடு›
- பொழுதுபோக்கு›
- புதிய படம் இயக்க தயாராகும் இயக்குனர் ஷங்கர்
புதிய படம் இயக்க தயாராகும் இயக்குனர் ஷங்கர்
By: Nagaraj Sat, 05 Dec 2020 2:03:19 PM
இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்டு விட்டு புதிய படம் இயக்க உள்ளார் இயக்குனர் ஷங்கர் என்று கோலிவுட் வட்டரத்தில் பரபரப்பான தகவல் உலா வருகிறது.
தமிழ் சினிமாவில் ஜெண்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ்,முதல்வன், அந்நியன், எந்திரன், 2.0 என பிரமாண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர்.
எந்த நேரத்தில் இந்தியன் 2 வை ஆரம்பித்தாரோ 2 வருடங்களாக பல பிரச்சனைகளால் அப்படம் முடங்கிக் கிடக்கிறது. ஒருபக்கம் அப்படத்தை உருவாக்கும் முயற்சியிலும் லைக்கா நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. எனவே, வெறுத்துப் போன அவர் வேறு படத்தை இயக்குவது என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம்.
மும்பையிலிருந்து ஒரு பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனம் ஷங்கரை வைத்து படம்
எடுக்க முன் வந்துள்ளது. பிரபல தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷ்
ஷங்கருக்கும், அந்த நிறுவனத்திற்கும் இடையே பாலமாக இருந்துள்ளார்.
அநேகமாக
இப்படம் 2 கதாநாயகர்களை கொண்ட கதை எனக்கூறப்படுகிறது. அதில் ஒருவரு நடிகர்
விக்ரமின் மகன் துருவ் என்பது உறுதியாகியுள்ளது. மற்றொரு ஹீரோவாக
கே.ஜே.ஆர் ராஜேஷே நடித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்கிறது சினிமா
வட்டாரம்.