Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இயக்குனர் ஷங்கருக்கு விலை உயர்ந்த கடிகாரம் பரிசு... கொடுத்தது உலக நாயகன் கமல்

இயக்குனர் ஷங்கருக்கு விலை உயர்ந்த கடிகாரம் பரிசு... கொடுத்தது உலக நாயகன் கமல்

By: Nagaraj Wed, 28 June 2023 9:28:36 PM

இயக்குனர் ஷங்கருக்கு விலை உயர்ந்த கடிகாரம் பரிசு... கொடுத்தது உலக நாயகன் கமல்

சென்னை: நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கருக்கு விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கமலுடன் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இதையடுத்து இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பார் என்றும், அப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா தனது காட்சிகளை முடித்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

actor,director,kamal haasan,price,shankar,watch, ,இயக்குநர், கமல்ஹாசன், நடிகர், வாட்ச், விலை, ஷங்கர்

படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கருக்கு விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து காமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , ‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் இயக்குனர் ஷங்கர்.இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி. என தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|