Advertisement

நடிகை அதுல்யா ரவி மீது இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் புகார்

By: Nagaraj Mon, 23 Nov 2020 9:28:27 PM

நடிகை அதுல்யா ரவி மீது இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் புகார்

படத்தில் நடிக்க ஒத்துழைப்பு தரவில்லை என்று அதுல்யா ரவி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் தற்போது சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி உட்பட பலர் நடிக்கும் படம் என் பெயர் ஆனந்தன். இதனை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர், அதுல்யா ரவி மீது பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.

athulya ravi,complaint,shooting,collaboration,director ,அதுல்யா ரவி, புகார், படப்பிடிப்பு, ஒத்துழைப்பு, இயக்குனர்

இந்தப்படத்தில் அதுல்யா ஒப்பந்தமான போது, ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அடுத்து சில படங்களில் நடித்ததும், தான் முன்னணி நடிகையாகி விட்டோம் என்கிற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இப்போது எங்கள் படத்துக்கு எந்த ஒத்துழைப்பையும் தர மறுத்துவிட்டார் என்று சொல்லியிருக்கிறார்

இந்த புகார் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அதுல்யா ரவி தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :