Advertisement

நாம ஜெயிச்சுட்டோம் மாறா என இயக்குனர் சுதா கொங்கரா பதிவு

By: Nagaraj Fri, 22 July 2022 10:08:13 PM

நாம ஜெயிச்சுட்டோம் மாறா என இயக்குனர் சுதா கொங்கரா பதிவு

சென்னை; “நாம ஜெயிச்சுட்டோம் மாறா” என்று பதிவிட்டு படப்பிடிப்பு குழுவினருடன் இயக்குனர் சுதா கொங்கரா பதிவிட்டுள்ளார்.

சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரை போற்று. பெரிய எதிர்பார்பிற்கு இடையே நேரடியாக OTT-யில் வெளியான சூரரை போற்று, மக்களிடையே பேரதரவை பெற்றது.

jeichuttom,mara,film crew,director,recording ,ஜெயிச்சுட்டோம், மாறா, படக்குழு, இயக்குனர், பதிவு

மேலும் சிறந்த விமர்சனங்களை பெற்ற இப்படத்தில் நடிகர் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதற்கிடையே இன்று 68-வது தேசிய விருது குறித்த பட்டியலை அறிவித்தனர். அதில் சூரரை போற்று சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், திரைக்கதை, பின்னணி இசை என 5 விருதுகளை குவித்தது.

மேலும் தற்போது இதனை கொண்டாடும் வகையில் இயக்குநர் சுதா கொங்கரா அவரின் உதவி இயக்குநர்களுடன் கேக் வெட்டியுள்ளார். மேலும் அந்த பதிவில் “நாம ஜெயிச்சுட்டோம் மாறா” என பதிவிட்டுள்ளார்.

Tags :
|