Advertisement

கஸ்டடி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டார் இயக்குனர் வெங்கட்

By: Nagaraj Thu, 11 May 2023 8:19:25 PM

கஸ்டடி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டார் இயக்குனர் வெங்கட்

சென்னை: ‘கஸ்டடி’ படம் நாளை (மே 12) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் உள்ள நீருக்கடியில் நடக்கும் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனர் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரித்துள்ளார்.

film,making video,movie,venkat ,படக்குழு, மேக்கிங் வீடியோ, வெங்கட் பிரபு

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். ‘கஸ்டடி’ படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கிறார்.

மேலும், இதில் சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளனர்.

‘கஸ்டடி’ நாளை (மே 12) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் உள்ள நீருக்கடியில் நடக்கும் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

Tags :
|
|