Advertisement

இயக்குனர் விக்ரமனின் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்

By: Nagaraj Thu, 01 Sept 2022 9:32:53 PM

இயக்குனர் விக்ரமனின் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்

சென்னை: பிரபல இயக்குனரான விக்ரமின், தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளார். இப்படத்தின் பூஜை இன்று நடந்தது. இதில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

90-களில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் விக்ரமன். முன்னணி இயக்குனராக இவர், தனது மகன் விஜய் கனிஷ்காவை புதிய படத்தின் மூலம் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். 'ஹிட்லிஸ்ட்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் ஆர்.கே. செல்லுலாயிட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

vikraman,son,hero,introducer,patapooja,served ,விக்ரமன், மகன், ஹீரோ, அறிமுகம், படப்பூஜை, பணியாற்றியவர்

அதேபோன்று கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய சூர்யகதிர், கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கவுள்ளனர். இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் காமெடி, ஆக்ஷன் டிராமா படமாக உருவாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் கலந்துக்கொண்டனர். இதையடுத்து விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கிடையே இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் கே.எஸ்.ரவிகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|