Advertisement

டிஸ்னி ஹாட் ஸ்டாரின் அடுத்த இணைய தொடர் பாராசூட்

By: Nagaraj Sat, 02 Sept 2023 3:34:54 PM

டிஸ்னி ஹாட் ஸ்டாரின் அடுத்த இணைய தொடர் பாராசூட்

புதுடில்லி: அடுத்த இணையத் தொடர் அறிவிப்பு... டிஸ்னி ஹாட்ஸ்டார் தனது அடுத்த இணையத் தொடரான “பாராசூட்” சீரிஸை அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இயக்குநர் ஶ்ரீதர்.கே இயக்கத்தில் உருவாக உள்ள “பாராசூட்” சீரிஸை அறிவித்துள்ளது.

stunts,danger money,art direction,narayanan,cinematography ,சண்டைக்காட்சிகள், டேஞ்சர் மணி, கலை இயக்குநர், நாராயணன், ஒளிப்பதிவு

நடிகர் கிருஷ்ணா தயாரிப்பு நிறுவனமான ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரிக்கிறது. இந்த வெப் சீரிஸில் நடிகர்கள் ஷாம், கிஷோர், கனி, விடிவி கணேஷ், பாவா செல்லதுரை, குழந்தை நட்சத்திரங்கள் சக்தி மற்றும் இயல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக ரெமியன் பணியாற்ற, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை அமைக்கவுள்ளார்.

Tags :
|