Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தங்கலான் படத்தில் நடித்ததற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுங்களா?

தங்கலான் படத்தில் நடித்ததற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுங்களா?

By: Nagaraj Fri, 24 Feb 2023 10:52:53 PM

தங்கலான் படத்தில் நடித்ததற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுங்களா?

சென்னை: கோலார் தங்கச் சுரங்கத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் தங்கலான் படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ரம் 28 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சியான் விக்ரம். டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய அவர் படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

இவரது நடிப்பில் பல்வேறு படங்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், இறுதியாக பொன்னியின் செல்வன் படம் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது பா ரஞ்சித் தயாரிப்பில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

actor vikram,salary,thangalan movie , சம்பளம், தங்கலான் திரைப்படம், நடிகர் விக்ரம்

இந்த படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹாலிவுட் நடிகர் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

கோலார் தங்கச் சுரங்கத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ரம் 28 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Tags :
|