Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இந்த தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் எந்தெந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது தெரியுமா

இந்த தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் எந்தெந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது தெரியுமா

By: vaithegi Thu, 09 Nov 2023 11:48:32 AM

இந்த தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் எந்தெந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது தெரியுமா

ஆண்டு தோறும் தீபாவளி பாண்டிகை என்றாலே திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற புது புது படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். எந்தெந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற விவரத்தை இங்கே பார்க்கலாம்.

துணிவு

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன துணிவு படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

television,diwali,movies ,தொலைக்காட்சி, தீபாவளி,படங்கள்

போர்தொழில்

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பல கோடிகளை லாபம் கொடுத்த திரைப்படம் என்றால் அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர்தொழில் படத்தை கூறலாம். நடுங்க வைக்கும் வகையில் க்ரைம் த்ரில்லர் கதையம்சத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

மார்க் ஆண்டனி

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் அனைவரையும் மிகவும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது என்றே கூறலாம். இந்த திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி பண்டிகை அன்று ஒளிபரப்பாகிறது.


Tags :
|