Advertisement

டாக்டர் படத்தின் செல்லமா பாடல் ஜூலை 16ஆம் தேதி வெளியாகிறது!

By: Monisha Tue, 14 July 2020 11:24:09 AM

டாக்டர் படத்தின் செல்லமா பாடல் ஜூலை 16ஆம் தேதி வெளியாகிறது!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் தொடங்க உள்ளது. இந்த படத்தில் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று நேற்று இரவு 7 மணிக்கு வெளியாகியது. அதில் டாக்டர் படம் குறித்த இரண்டு நிமிட வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் ஆகிய மூவரும் 'டாக்டர்' படத்தின் பாடல் குறித்து டிஸ்கஸ் செய்வது போன்றும் அனிருத் கோபித்துக் கொண்டு வெளியே செல்வது போன்றும் பின்னர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்து பாட்டை கம்போஸ் செய்ய சொல்வது போன்றும் இந்த வீடியோ அமைந்துள்ளது.

doctor movie,chellamma song,new update,crew,sivakarthikeyan ,டாக்டர் படம்,செல்லமா பாடல்,புதிய அப்டேட்,படக்குழுவினர்,சிவகார்த்திகேயன்

காமெடியாக அமைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவின் இறுதியில் 'டாக்டர்' படத்தின் 'செல்லமா' என்று தொடங்கும் பாடல் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடல் டிக் டாக் தடை பற்றிய பாடல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பாடலில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.

Tags :
|