Advertisement

நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோயா? ரசிகர்கள் பரபரப்பு

By: Nagaraj Wed, 12 Aug 2020 11:16:52 AM

நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோயா? ரசிகர்கள் பரபரப்பு

நடிகர் சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள அமெரிக்கா செல்கிறார் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். கேஜிஎஃப் 2-ஆம் பாகத்தில் நடிக்கிறார். இவரது கதாபாத்திரம், தோற்றம் குறித்த மிரட்டலான புகைப்படம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலியால் அவதிப்பட்ட சஞ்சய் தத் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார்.

usa,cancer,actor sanjay dutt,doctors ,அமெரிக்கா, புற்றுநோய், நடிகர் சஞ்சய் தத், மருத்துவர்கள்

இதற்கிடையே, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஒன்று பதிவிட்டார். அதில், வணக்கம் நண்பர்களே... சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய கால ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள்.

கவலைப்படவோ அல்லது தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன், நான் விரைவில் மீண்டும் வருவேன்" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4ஆம் கட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு இருப்பதால் உடனடியாக சிகிச்சை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அமெரிக்கா செல்ல இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :
|
|