Advertisement

சும்மா புருடா விடாதீங்க விக்கி... கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

By: Nagaraj Sat, 15 Apr 2023 10:59:16 PM

சும்மா புருடா விடாதீங்க விக்கி... கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

சென்னை: அஜித் ஒரு கதையை ஒப்புக்கொண்ட பிறகு, அது பிடிக்கவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் சொல்கிறதா? “சும்மா புருடா விடாதீங்க விக்கி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அஜித்தின் 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும், விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்துக்காக விக்னேஷ் சிவன் உருவாக்கிய திரைக்கதை லைக்காவுக்கும் அஜித்துக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டு மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ajith,director,lyka, ,அஜித் 62, புருடா, விக்னேஷ் சிவன்

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியில், ‘நான் சொன்ன கதை அஜித் சார்க்கு பிடித்திருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை.

அதனால் நான் வெளியேற வேண்டியதாயிற்று.’ இதைப் பார்த்து தற்போது விக்னேஷ் சிவனுக்கு எதிராக ட்ரோல்கள் உருவாகியுள்ளன. ”அஜித் ஒரு கதையை ஒப்புக்கொண்ட பிறகு, அது பிடிக்கவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் சொல்கிறதா? “சும்மா புருடா விடாதீங்க விக்கி” எனக் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

Tags :
|
|