Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இந்தாண்டு ஓணம் பண்டிகைக்கு வெளியாகிறது துல்கர்சல்மானின் கிங் ஆப் கோத்தா

இந்தாண்டு ஓணம் பண்டிகைக்கு வெளியாகிறது துல்கர்சல்மானின் கிங் ஆப் கோத்தா

By: Nagaraj Tue, 27 June 2023 11:32:53 PM

இந்தாண்டு ஓணம் பண்டிகைக்கு வெளியாகிறது துல்கர்சல்மானின் கிங் ஆப் கோத்தா

கேரளா: துல்கர் சல்மானின் 11 வருட திரையுலக வாழ்க்கையைக் கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு ஓணம் அன்று ‘கிங் ஆஃப் கோத்தா’ திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘கிங் ஆஃப் கோதா’. இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜோய் மற்றும் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

துல்கர் சல்மானின் 11 வருட திரையுலக வாழ்க்கையைக் கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு ஓணம் அன்று ‘கிங் ஆஃப் கோத்தா’ திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

dulquer salmaan,king of gotha,movie,simbu,teaser, ,கிங் ஆப் கோதா, சிம்பு, டீசர், துல்கர் சல்மான், படம்

சமீபத்தில் படக்குழுவினர் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிமுகம் செய்தனர். இந்நிலையில், ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டீசர் ஜூன் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும், பல்வேறு மொழிகளில் வெளியிடும் பிரபலங்களை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிம்புவும், தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபுவும், கன்னட டீசரை நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிடுவார்கள் என போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|