Advertisement

ஈஸ்வரன் படத்தின் இசை பணிகள் நிறைவு; தமன் டுவிட்டர் பதிவு

By: Nagaraj Mon, 28 Dec 2020 3:37:39 PM

ஈஸ்வரன் படத்தின் இசை பணிகள் நிறைவு; தமன் டுவிட்டர் பதிவு

இசையமைப்பு பணிகள் நிறைவு... இசையமைப்பாளர் தமன் ஈஸ்வரன் படத்தின் முழு இசை பணிகளும் நிறைவடைந்து விட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'ஈஸ்வரன்'. இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நந்திதா, பாலசரவணன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரடொக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்த படத்தை வருகிற பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் .

eswaran,composition,completion,daman,dwight,simbu ,ஈஸ்வரன், இசையமைப்பு, நிறைவு, தமன், டுவிட், சிம்பு

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஈஸ்வரன் படத்தின் இசை பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டதாக தனது ட்விட்டர் பகுதியில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் சுசீந்திரன் மற்றும் நடிகர் சிம்புவிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் தமிழன் பாட்டுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தின் டிரைலர் ரிலீசுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.‌

Tags :
|
|