Advertisement

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

By: Monisha Fri, 09 Oct 2020 2:09:45 PM

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் இருந்த நிலையில் திடீரென தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்து அதற்கென தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரும் நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் தயாரிப்பாளர்கள் அக்டோபர் 15-ஆம் தேதி காலை 11 மணி முதல் 23ம் தேதி 4:30 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

election,date,tamil film producers association ,தேர்தல், தேதி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 23ஆம் தேதி மாலை 4 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அன்று மாலையே வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள். அக்டோபர் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அதன் பின்னர் நவம்பர் 22 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|