Advertisement

பிரபல காமெடி நடிகை வித்யூலேகாக்கு திருமண நிச்சயதார்த்தம்!

By: Monisha Tue, 01 Sept 2020 12:59:42 PM

பிரபல காமெடி நடிகை வித்யூலேகாக்கு திருமண நிச்சயதார்த்தம்!

தமிழ் திரை உலக பிரபல காமெடி நடிகைக்கு நிச்சயதார்த்தம் ஆனதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய 'நீதானே என் பொன்வசந்தம்' என்ற திரைப்படத்தில் சமந்தாவுக்கு தோழியாக அறிமுகமானவர் நடிகை வித்யூலேகா. அதன் பின்னர் அவர் ஜில்லா, வீரம், வேதாளம், தீயா வேலை செய்யணும் குமாரு, புலி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை வித்யூலேகாவுக்கு கடந்த 26ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் மாப்பிள்ளை சஞ்சய் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

comedy actress,vithuleka,marriage,engagement,greetings ,காமெடி நடிகை,வித்யூலேகா,திருமணம்,நிச்சயதார்த்தம்,வாழ்த்து

ஊரடங்கு நேரத்தில் இந்த நிச்சயதார்த்தம் நடந்ததால் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் வித்யூலேகா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நடிகை வித்யூலேகா இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை செய்துள்ளார் என்பதும், வித்யூலேகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆனதை அடுத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :