Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • எல்லாரும் அரசியலுக்கு வரலாம்... விஜய்யும் வரலாம்: இயக்குனர் வெற்றிமாறன் என்ன சொல்கிறார்

எல்லாரும் அரசியலுக்கு வரலாம்... விஜய்யும் வரலாம்: இயக்குனர் வெற்றிமாறன் என்ன சொல்கிறார்

By: Nagaraj Mon, 06 Nov 2023 4:06:25 PM

எல்லாரும் அரசியலுக்கு வரலாம்... விஜய்யும் வரலாம்: இயக்குனர் வெற்றிமாறன் என்ன சொல்கிறார்

சென்னை: விஜய் அரசியலுக்கு வருவது குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் பாதை பற்றி பலரும் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர். சமீப, நாட்களாகவே விஜய்யின் அரசியல் நகர்வு குறித்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சிலர், விஜய் அரசியலுக்கு வரலாம் போன்ற ஆதரவான கருத்துக்களை கூறியுள்ளனர்.

அந்த வகையில் சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த தூய்மை பணியை தொடங்கி வைத்த பின், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் விஜய் மட்டுமல்ல, அனைவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான தகுதிவுள்ளது.

vetimaran,vijay,politics,merits,welcome ,வெற்றிமாறன்,விஜய், அரசியல், தகுதி உள்ளது, வரவேற்கத்தக்கது

மேலும் அது முற்றிலும் வரவேற்கத்தக்கது, நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரலாம், முன்னதாக கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அதுதான் அடித்தளமே என்று கூறியதோடு, அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் விஜய் செயல்பட்டு வருகிறார் என்று கூறியது பரபரப்பை ஏற்புத்தியுள்ளது.

அதை தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அரசியலிலும் சமூகத்திலும் சினிமா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, சமீப காலமாவே க நல்ல விதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. சமூகத்தில் நல்லவிதமான உரையாடல்களை சினிமா ஏற்படுத்தியுள்ளது என்று கூறியதோடு, ஜெய் பீம் போன்ற படங்கள் வெளியான பிறகு அந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செய்துள்ளது என அவர் கூறினார்.

Tags :
|
|