Advertisement

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் பற்றி தகவலால் எகிறிய எதிர்பார்ப்பு

By: Nagaraj Sun, 06 Dec 2020 5:07:50 PM

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் பற்றி தகவலால் எகிறிய எதிர்பார்ப்பு

ராஜமௌலியின் அடுத்த படம் பற்றி தகவல் ரசிகர்களை வெகு எதிர்பார்ப்பில் தள்ளியுள்ளது.

பாகுபலி வசூலையும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் முறியடிக்கும் என்று ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி.

இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் 400 கோடி வசூலை அள்ளி சென்றது .இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர் ஹிட்டடித்தது. ரூ.600 கோடிக்கு மேல் முதல் பாகமும்,ரூ.1500 கோடிக்கு மேல் இரண்டாம் பாகமும் வசூலில் அள்ளி குவித்து பிரமாண்ட சாதனை படைத்தது.

rajamouli,rrr film,anticipation,fans,great ,ராஜமௌலி, ஆர்ஆர்ஆர் படம், எதிர்பார்ப்பு, ரசிகர்கள், பிரமாண்டம்

இந்த நிலையில் தற்போது ராஜமௌலி இயக்கி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர் .ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் இந்த திரைப்படத்தின் கதாபாத்திரத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படம் பாகுபலி வசூலையும் முறியடித்து பிரமாண்ட வெற்றியை பெறும் என்று ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளர் தம்மரெட்டி பரத்வாஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் 500 கோடி ரூபாய் வசூலை அள்ளிக் குவிக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் ஆர்ஆர்ஆர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags :
|