Advertisement

ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் நடித்து அசத்திய டாம்குரூஸ்

By: Nagaraj Thu, 10 Sept 2020 1:12:17 PM

ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் நடித்து அசத்திய டாம்குரூஸ்

மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளின் படப்பிடிப்பில் நடித்து அசத்தி உள்ளார் நடிகர் டாம்குரூஸ். மிஷன் இம்பாசிபில் 7 படத்திற்காக இவ்வாறு சாகசம் செய்துள்ளார்.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் தற்போது மிஷன் இம்பாசிபில் படத்தின் 7 ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். 58 வயதான டாம் குரூஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை சில ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார்.

நார்வேயில் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாக இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஹெல்செல்ட் அருகே நடந்த படப்பிடிப்பில் ஹெல்செட்கோபன் மலையின் உச்சியில் ஒரு பெரிய வளைவில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் குதித்துள்ளார். பிறகு மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு, ஒரு பாராசூட்டில் தரை இறங்குகிறார்.

tom cruise,mission impossible,adventure,shooting ,டாம் குரூஸ், மிஷன் இம்பாசிபில், சாகசம், படப்பிடிப்பு

மிஷன் இம்பாசிபில் 7 படத்தின் படப்பிடிப்பு கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்டு, நார்வேயில் மீண்டும் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டை நவம்பர் 19, 2021 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

ஈதன் ஹன்ட் என்ற கதாப்பாத்திரத்தில் மிஷன் இம்பாசிபில் படத்தில் டாம் குரூஸ் அதிரடியான சாகசங்களை செய்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறார். இந்தப் படம் மூலம் இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரி உடன், 2015 ஆம் ஆண்டின் மிஷன்: இம்பாசிபில் - ரோக் நேஷன் மற்றும் 2018 ஆம் ஆண்டின் மிஷன்: இம்பாசிபில் - ஃபால் அவுட் படத்துடன் மீண்டும் இணைந்துள்ளார் டாம் குரூஸ்.

Tags :