Advertisement

அஜித்தை பார்த்து சொகுசு பைக்கை வாங்கிய பிரபல நடிகை மஞ்சுவாரியார்

By: Nagaraj Sun, 19 Feb 2023 10:15:34 PM

அஜித்தை பார்த்து சொகுசு பைக்கை வாங்கிய பிரபல நடிகை மஞ்சுவாரியார்

சென்னை: சொகுசு பைக்கை வாங்கிய பிரபல நடிகை... மஞ்சுவாரியர் சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள சொகுசு பைக்கை வாங்கினார். அஜித்குமாரை பார்த்து நடிகை மஞ்சுவாரியருக்கும் பைக் மீது ஆர்வம் ஏற்பட்டதால் இந்த சொகுசு பைக்கை வாங்கியுள்ளார்.

அஜித்தும், மஞ்சுவாரியாரும் துணிவு படத்தில் இணைந்து நடித்தனர். வடமாநிலங்களில் படப்பிடிப்பின் போது, அஜித்குமார் ஓய்வு நேரத்தில் பைக்கில் பல்வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். ஒரு கட்டத்தில் மஞ்சு வாரியாரும் பைக்கில் அவருடன் இணைந்தார்.

manjuwarrier,adventure,ajith kumar,shooting, ,அஜித்குமார், புகைப்படங்கள், மஞ்சுவாரியர், லடாக்கில்

லடாக்கில் அஜித்குமாருடன் மஞ்சுவாரியர் பைக்கில் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. படப்பிடிப்பை முடித்துக் கொண்டு கேரளா திரும்பிய மஞ்சு வாரியர், எர்ணாகுளம் காக்கநாடு ஆர்டிஓ அலுவலகம் சென்று ஓட்டுநர் உரிமம் வாங்கினார்.

தொடர்ந்து மஞ்சுவாரியர் சுமார் ரூ.22 லட்சம் மதிப்பிலான சொகுசு பைக்கை வாங்கியுள்ளார். அவர் பைக்கை ஓட்டும் வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

Tags :