Advertisement

வித்தியாசமான தோற்றத்தில் பிரபல காமெடி நடிகர் விவேக்!

By: Monisha Sat, 07 Nov 2020 5:32:01 PM

வித்தியாசமான தோற்றத்தில் பிரபல காமெடி நடிகர் விவேக்!

விவேக் வித்தியாசமான தோற்றத்துக்கு தன்னை மாற்றி எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.

கே.பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான விவேக் இதுவரை சுமார் 500 படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். வெள்ளைப்பூக்கள், நான்தான் பாலா, பாலக்காட்டு மாதவன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார்.

தற்போது அரண்மனை 3-ம் பாகம், கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். வெள்ளைப்பூக்கள் படத்தின் இரண்டாம் பாகம் படத்திலும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

vivek,photographer,weird look,viral,comedy actor ,விவேக்,புகைப்படம்,வித்தியாசமான தோற்றம்,வைரல்,காமெடி நடிகர்

இந்த நிலையில் விவேக் வித்தியாசமான தோற்றத்துக்கு தன்னை மாற்றி புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. விவேக் அடுத்து புதிய படத்தை டைரக்டு செய்து நடிக்க உள்ளார். படத்துக்கான திரைக்கதையை அவர் தயார் செய்து இருக்கிறார்.

அந்த படத்தில் இதே தோற்றத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|