- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்டெல்லா ஸ்டீவன்ஸ் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்டெல்லா ஸ்டீவன்ஸ் காலமானார்
By: Nagaraj Sun, 19 Feb 2023 12:15:49 PM
நியூயார்க்: பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்டெல்லா ஸ்டீவன்ஸ் (84) காலமானார். ஸ்டெல்லா ஸ்டீவன்ஸ், எல்விஸ் பிரெஸ்லியுடன் “கேர்ள்ஸ்! கேர்ள்ஸ்! கேர்ள்ஸ்!” மற்றும் ஜெர்ரி லூயிஸுடன் "தி நட்டி ப்ரொஃபசர்" மற்றும் பேரழிவு திரைப்படமான "தி போஸிடான் அட்வென்ச்சர்" ஆகிய திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான ஹாலிவுட் நடிகைகளில் ஒருவர்
வயோதிகம் தொடர்பான நோய்க்குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த ஸ்டெல்லா ஸ்டீவன்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸில் இறந்தார். முன்னதாக அவர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது மகன் ஆண்ட்ரூ ஸ்டீவன்ஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
1963 ல் வெளிவந்த "தி கோர்ட்ஷிப் ஆஃப் எடி'ஸ் ஃபாதர்," கதையில் க்ளென் ஃபோர்டு மற்றும் ஷெர்லி ஜோன்ஸ் கூட்டணியில் ஸ்டெல்லா ஸ்டீவன்ஸ் தனது வெரைட்டியான நடிப்பை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தி இருப்பார்.
நகைச்சுவையைப் பிரதானமாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் ஸ்டெல்லா மொண்டானாவில் இருந்து வந்த புத்திசாலித்தனமான ஆனால் பொம்மை போலிருக்கும் நீதியை நிலைநாட்டும் ஐடியல் பெண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றார்.
1966 ல் வெளிவந்த "தி சைலன்சர்ஸ்", மாட் ஹெல்ம் ஃபிலிம் சீரிஸின் ஸ்பை ஸ்பூஃப்களில் முதன்மையானது, இத்தகைய படங்களுக்கென 2010 ல்வெளியிடப்பட்ட , ஒரு விமர்சனத்தில் வாட்ச்சிங் தி டிடெக்டிவ்ஸ் இணையதளம் கூறியது குறிப்பிடத்தக்கது. இவரது மகனும் ஒரு நடிகரே அவரது பெயர் ஆண்ட்ரூ ஸ்டீவன்ஸ்.