- வீடு›
- பொழுதுபோக்கு›
- கமல் குறித்து பதிவிட்ட பிரபல ஹாலிவுட் நடிகை
கமல் குறித்து பதிவிட்ட பிரபல ஹாலிவுட் நடிகை
By: Monisha Tue, 14 June 2022 4:07:34 PM
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய நடிகர்களாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விக்ரம் படம் வெளியாகி 10 நாட்களில் ரூ.300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றுமின்றி திரைபிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி விக்ரம் படக்குழுவை சந்தித்து பாராட்டினார்.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோருக்கு ரசிகர் ஒருவர் நீங்கள் விக்ரம் படத்தை பார்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதற்கு நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர் பதிலளித்தபோது, என்னுடைய படத்தின் பணிகள் முடிந்த பிறகு கண்டிப்பாக விக்ரம் படம் பார்ப்பேன். அவர் என்ன பண்ணாலும் தங்கமாகத் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
மெக்கன்ஸி வெஸ்ட்மோரின் இந்த பதிவு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோரின் தந்தை மைக்கேல் வெஸ்ட்மோர், கமல் நடிப்பில் வெளியான இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம் ஆகிய படங்களுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றியுள்ளார்.