Advertisement

பிரபல கன்னட நடிகர் கொரோனாவுக்கு பலி; நடிகர் நடிகைகள் இரங்கல்

By: Monisha Mon, 20 July 2020 12:01:52 PM

பிரபல கன்னட நடிகர் கொரோனாவுக்கு பலி; நடிகர் நடிகைகள் இரங்கல்

கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு பிரபலங்கள் பலர் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் பலர் பலியாகி வருகின்றனர். கடந்த சில நாட்கள் முன்பு பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் கொரோனாவில் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான மூத்த நடிகர் ஹுலிவானா கங்காதரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு பிரேமலோகா என்ற தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அப்போது பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார் அவருக்கு வயது 70. மரணம் அடைந்த ஹுலிவானா கங்காதர் நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்து இருக்கிறார்.

உல்டா பல்டா, கிராம தேவத, சப்தவேதி உள்பட பல படங்களில் இவரது திறமை பலராலும் பாராட்டப்பட்டது. ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். ஹுலிவானா கங்காதர் மறைவுக்கு நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags :