Advertisement

இயக்குனர் அவதாரம் எடுத்த பிரபல தயாரிப்பாளர்!

By: Monisha Sat, 03 Oct 2020 11:34:52 AM

இயக்குனர் அவதாரம் எடுத்த பிரபல தயாரிப்பாளர்!

அஜீத் நடித்த 'மங்காத்தா' உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாநிதி அழகிரி என்பதும் இவர் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களின் பேரன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் ஆவார்.

இந்த நிலையில் தயாநிதி அழகிரி தொடர்ச்சியாக பல திரைப்படங்களை தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். தயாநிதி அழகிரி இயக்கிய குறும்படத்திற்கு 'மாஸ்க்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாநிதி அழகிரியின் சகோதரரும் நடிகருமான அருள்நிதி தனது டுவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்து தனது சகோதரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

dayanidhi azhagiri,mask,title,first look,arulnithi ,தயாநிதி அழகிரி,மாஸ்க்,டைட்டில்,பர்ஸ்ட் லுக்,அருள்நிதி

தயாநிதி அழகிரியின் முதல் இயக்குனர் முயற்சிக்கு நடிகர் சூரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அவர் தனது ட்வீட்டில் கூறியுள்ளதாவது:-

'மாஸ்க்குக்கு உள்ள மாஸான விசயம் மறைஞ்சு இருக்குன்னு மட்டும் தெரியுது. இயக்குனர் அவதாரம் எடுத்துருக்கும் பாசத்துக்குரிய தயாநிதி அழகிரி ப்ரதருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார். மேலும் அனிருத், ஹரிஷ் கல்யாண், சாந்தனு, நிதின் சத்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் தயாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|
|