Advertisement

காதலியை கரம் பிடித்தார் பிரபல தெலுங்கு நடிகர் நிதின்!

By: Monisha Tue, 28 July 2020 11:11:17 AM

காதலியை கரம் பிடித்தார் பிரபல தெலுங்கு நடிகர் நிதின்!

கொரோனா ஊரடங்கில் பிரபல தெலுங்கு நடிகர் நிதின் திருமணம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நிதின். இவர் 2002-ல் ஜெயம் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ஜெயம் ரவி நடிக்க ஜெயம் என்ற பெயரிலேயே தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தில், சம்பாரம், தைரியம், ராம், தாக்கரி, விக்டரி, ஹீரோ, துரோனா, சீனிவாச கல்யாணம் உள்பட பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது வெங்கு குடுமுலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

hyderabad,star hotel,telugu actor nitin,married ,ஐதராபாத்,நட்சத்திர ஓட்டல்,தெலுங்கு நடிகர் நிதின்,திருமணம்

நிதினுக்கு ஷாலினி என்பவருடன் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 15 மற்றும் 16-ந்தேதிகளில் துபாயில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். கொரோனால் அது நடக்கவில்லை.

"ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் முக்கியமானது. உயிர் அதை விட முக்கியம் எனவே திருமணத்தை தள்ளி வைத்தோம்" என்று நிதின் கூறினார். இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிதின்ஷாலினி திருமணம் நடந்தது. இதில் நடிகர்கள் வருண் தேஜ், சாய் தரண் தேஜ் மற்றும் நிதின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

Tags :