Advertisement

விஜய் படம் பற்றி வெளியாகும் தகவல்களால் ரசிகர்கள் குழப்பம்

By: Nagaraj Sat, 20 Aug 2022 10:48:11 PM

விஜய் படம் பற்றி வெளியாகும் தகவல்களால் ரசிகர்கள் குழப்பம்

சென்னை: விஜய் படம் பற்றி வெளி வந்து கொண்டு இருக்கும் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும், குழப்பத்தையும் மாறி, மாறி ஏற்படுத்தி வருகிறது.

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாவே விஜயின் 67-வது திரைப்படத்தை லோகேஷ் தான் இயக்குவதாகவும், இந்தப் படத்தில் நிறைய வில்லன்கள் மற்றும் 2 நடிகைகள் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், திடீரென தான் சமூக வலைத்தளத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். உடனே ரசிகர்கள் அனைவரும் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்திற்கான கதையை தான் எழுத சென்றுள்ளதாக கிசுகிசுத்து வந்தனர். தற்போது, அது உறுதியாகி விட்டதாக தெரிகிறது. அதாவது சமீபத்தில் தளபதி 67-ல் நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

official,attention,internet,trend,vijay movie ,அதிகாரப்பூர்வம், கவனம், இணையம், ட்ரெண்ட், விஜய் படம்

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் திரிஷாவை பின்தொடர்ந்து இருப்பதை கண்ட ரசிகர்கள் இந்த தகவலை உறுதி என நினைத்து இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

அதேபோல், நடிகை கீர்த்தி சுரேஷையும் பின்தொடர்ந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் நடிகை சமந்தா விஜய்க்கு வில்லியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இப்பொது கீர்த்தி சுரேஷ் குறுக்க வந்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சரி… எது என்னவோ இன்னும் சில நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எது உண்மை தெரிந்து விடும்.

Tags :
|