Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்

திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Sun, 07 Aug 2022 8:44:59 PM

திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

tiruchirappalam,trailer,anirudh,music,heroines,fans ,திருச்சிற்றம்பலம், டிரைலர், அனிருத், இசை, கதாநாயகிகள், ரசிகர்கள்

திருச்சிற்றம்பலம் படத்தில் அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியானது.

நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|