Advertisement

லியோ படத்தின் ஹேஷ்டேக் செய்த சாதனையால் ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Tue, 05 Sept 2023 12:39:06 PM

லியோ படத்தின் ஹேஷ்டேக் செய்த சாதனையால் ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: 'லியோ' ஹேஷ்டேக் 25 மில்லியன் பதிவுகளை கடந்துள்ளது. இந்த சாதனையால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

fans,celebration,leo hashtag,25 million registrations ,ரசிகர்கள், கொண்டாட்டம், லியோ ஹேஷ்டேக், 25 மில்லியன் பதிவு

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஹேஷ்டேக் சாதனை செய்துள்ளது. அதாவது, X தளத்தில் 'லியோ' ஹேஷ்டேக் 25 மில்லியன் பதிவுகளை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Tags :
|