Advertisement

ரசிகர்கள் உற்சாகம்... மீண்டும் போலீசாக களம் இறங்கும் விஜய் சேதுபதி

By: Nagaraj Sat, 26 Nov 2022 9:54:17 PM

ரசிகர்கள் உற்சாகம்... மீண்டும் போலீசாக களம் இறங்கும் விஜய் சேதுபதி

சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் டிஎஸ்பி படத்தின் டிரெய்லர் வெளியாகி செம வைரலாகி வருகிறது. சேதுபதி படத்திற்கு பின் போலீஸ் கேரக்டரில் களம் இறங்கி உள்ளார் விஜய் சேதுபதி. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

website,trailer,vijay sethupathi,first look,poster ,வலைதளம், டிரைலர், விஜய் சேதுபதி, பர்ஸ்ட் லுக், போஸ்டர்

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். டி.எஸ்.பி மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.


சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. டி.எஸ்.பி இந்நிலையில், 'டிஎஸ்பி' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags :