Advertisement

இந்தியன்-2 படத்தின் புதிய அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி

By: Nagaraj Sat, 02 July 2022 7:56:22 PM

இந்தியன்-2 படத்தின் புதிய அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை: வரும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்களில் இந்தியன் 2 படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு இருக்கின்றனர் என்று புதிய தகவல் ஒன்று, கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த இந்தியன் 2 படம் பாதியில் நிற்கிறது.

question mark,indian 2,busy,project,shooting,three months ,கேள்விக்குறி, இந்தியன் 2, மும்முரம், திட்டம், படப்பிடிப்பு, மூன்று மாதம்

அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியன் 2 திரைப்படத்திற்கு 70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 30 சதவீத காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது.

அந்த வேலைகளை செப்டம்பர் மாதத்தில் தொடங்க இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பில் நிறுவனமான லைகாவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்களில் இந்தியன் 2 படப்பிடிப்பை முடிக்கவும் திட்டமிட்டு இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனர் ஷங்கருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்தியன் 2 திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனை தவிர சித்தார்த், பிரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளர். அதில் மறைந்த நடிகர் விவேக் காட்சிகள் இடம்பெறுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.

Tags :
|