Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • காலில் கட்டுடன் உள்ள திரிஷா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

காலில் கட்டுடன் உள்ள திரிஷா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

By: Nagaraj Sun, 06 Nov 2022 8:40:51 PM

காலில் கட்டுடன் உள்ள திரிஷா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: காலில் கட்டு போட்டுள்ள படத்தை நடிகை திரிஷா வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் கவலையைடைந்து என்னாச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. சமீபத்தில் இவர் நடித்த படங்கள் பெரியஅளவில் ஹிட் அடிக்காத நிலையில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

actress,trisha,leg bandage,photo,fans,shock ,நடிகை, திரிஷா, காலில் கட்டு, புகைப்படம், ரசிகர்கள், அதிர்ச்சி

மேலும் இந்த படத்தில் திரிஷாவின் நடிப்பு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து விட்டது. இந்தத் திரைப்படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக தளபதி 67 திரைப்படத்தின் திரிஷா நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகை திரிஷாவின் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Tags :
|
|
|