Advertisement

பதான் படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்

By: vaithegi Fri, 24 Feb 2023 8:12:10 PM

பதான் படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்

மொத்தம் ரூ.1009 கோடியை வசூல் ... இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான் ". இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து இந்த படம் கடந்த ஜனவரி 25-ம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது. பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டு வருகிறது.

shah rukh khan,pathan ,ஷாருக்கான் ,பதான்

மேலும், 'பதான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது 'பதான்' திரைப்படம் இந்தியாவில் ரூ.629 கோடியும் வெளிநாடுகளில் ரூ.380 கோடியுமாக செய்துள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்

Tags :