Advertisement

பிக்பாஸ் சீசன்-4 ப்ரமோ வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Fri, 28 Aug 2020 10:54:15 AM

பிக்பாஸ் சீசன்-4 ப்ரமோ வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்

தமிழில் பிக்பாஸ் சீசன் 4-ன் ப்ரமோ விஜய் டிவியில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சி விஜய் டிவியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. ஓவியா, ஆரவ், ரைசா, ஜூலி, காயத்ரி என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வென்றார். இரண்டாவது சீசன் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. அதில் ரித்திவிகா டைட்டில் வென்றார்.

fans,excitement,promo,vijay tv,big boss 4 ,ரசிகர்கள், உற்சாகம், ப்ரமோ, விஜய் டிவி, பிக்பாஸ் 4

மூன்றாவது சீசன் ஆவது முதல் சீசன் போல இருக்குமா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இந்த மூன்று சீசன்களையும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தமிழில் சீசன் 4 நிகழ்ச்சியின் பிரமோ இப்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் சமூக வலைதளங்களில் வெளியான பிரமோவில் விரைவில் பிக்பாஸ் சீசன் 4 தொடங்குவது குறித்த அறிவிப்பை கமல் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் யார் போட்டியாளர்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

Tags :
|
|